லண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு? புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் அரசு முக்கிய முடிவு என தகவல்
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், லண்டனில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இப்போது புதிய வகையில் உருவாகி பிரித்தானியாவை மிரட்டி வருகிறது என்றே கூறலாம்.
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக தினசரி இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது.
உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் லண்டனில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இதனால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் கொரோனா அவசரகால மருத்துவமனைகளை மீண்டும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.