தினசரி ரூ.416 முதலீடு செய்தால்... ரூ.64 லட்சம் பெறலாம்: விரிவான விளக்கம்
முதலீடுகளில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் அல்லது புதிய வீடு உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகளை எளிதாக சமாளித்துவிடலாம்.
பிள்ளை பிறந்ததும் கணக்கை துவங்க வேண்டும்
பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்போதே சேமிக்கத் துவங்க வேண்டும். அதற்கான வாய்ப்பை இந்திய அரசாங்கம் Sukanya Samriddhi Yojana என்ற திட்டத்தின் கீழ் அளிக்கிறது.
இந்த திட்டமானது உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணத்தின் நிதிச்சுமையை குறைக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முழுமையான பலனை அனுபவிக்க, பிள்ளை பிறந்ததும் இதில் கணக்கை துவங்க வேண்டும்.
அல்லது உங்கள் மகள் 10 வயதை எட்டும் முன்னர், இந்த திட்டத்தில் இணைய வேண்டும். இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை அரசாங்கம் மாற்றியமைப்பார்கள்.
2023ல் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில், இதுவரை வட்டி விகிதம் மாற்றப்படவில்லை, ஆண்டுக்கு 8 சதவீதம் என்றே உள்ளது. உங்கள் மகள் 18 வயது நிரம்பியதும், இந்த திட்டத்தில் இருந்து 50 சதவீத தொகையை திரும்பப்பெறலாம்.
ரூ.64 லட்சம் அளவுக்கு திரட்ட முடியும்
எஞ்சிய தொகையானது அவர் 21 வயதை எட்டும் போதும் பெற முடியும். நாளுக்கு சுமார் 416 ரூபாய் அல்லது ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு 7.6 வட்டியுடன் ஒரு பெரும்தொகையை நீங்கள் உங்கள் மகளுக்காக சேமிக்கலாம்.
அதாவது உங்கள் மகளுக்கு 21 வயதை எட்டும் போது, உங்களுக்கு கிடைக்கப் போகும் தொகை ரூ.63,79,634. உங்களின் மொத்த முதலீடு என்பது ரூ.22,50,00 மட்டுமே.
வட்டி மட்டும் ரூ.41,29,634. ஒவ்வொரு மாதமும் 12,500 ரூபாய் முதலீடு செய்து வந்தால், உங்கள் மகளின் எதிர்காலத் தேவைக்காக சுமார் 64 லட்சம் ரூபாய் அளவுக்கு திரட்ட முடியும் என்பதே இந்த Sukanya Samriddhi Yojana திட்டம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |