நாளுக்கு 400 மில்லியன் டொலர்... முடங்கிய அமெரிக்க அரசால் வீணாகும் பொதுமக்கள் வரிப்பணம்
அமெரிக்க அரசு முடங்கியுள்ளதால் கட்டாய விடுப்பில் இருக்கும் 750,000 பெடரல் ஊழியர்களுக்கான சம்பளமாக பொதுமக்களின் வரிப்பணத்தில் 1.2 பில்லியன் டொலர் செலவிடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கட்டாய விடுப்பில்
வெளியான தரவுகளின் அடிப்படையில் நாளுக்கு 400 மில்லியன் டொலர் செலவாகும் என்றே கூறுகின்றனர். தற்போது மூன்று நாட்களாக அரசாங்கம் முடங்கியுள்ள நிலையில், செலவு மட்டும் 1.2 பில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது 34 நாட்கள் அரசாங்கம் முடக்கப்பட்டிருந்தது. இந்த நெருக்கடியான சூழலில் அரசாங்கம் மீண்டும் செயல்படும் நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும், உழைக்கும் மக்களுக்கு சேவை செய்ய கட்டாய விடுப்பில் இருக்கும் ஃபெடரல் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், அரசாங்கம் முடக்கப்பட்டிருந்தாலும் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 750,000 என கூறப்பட்டாலும், இந்த முடக்கம் பல நாட்கள் நீடிக்கும் என்றால், இன்னும் பல ஆயிரம் ஊழியர்கள் வேலைக்கு திரும்பாமல் சம்பளம் வாங்கும் நிலை உருவாகும் என்றே கூறுகின்றனர்.
அதாவது கட்டாய விடுப்புக்கு அனுப்பப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |