பில்லியன் கணக்கான மக்கள் வரிபணத்தை வீணடித்த பிரித்தானியா அரசாங்கம்! வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும் உண்மை
பிரித்தானியா மக்கள் வரிபணத்தில் தரமில்லாத பிபிஇ கிட் அரசாங்கம் வாங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுமார் 2.1 பில்லியன் பவுண்ட மதிப்புள்ள பிபிஇ கிட் NHS மருத்துவர்கள் மற்றும் செலவியர்கள் பயன்படுத்த பாதுகாப்பற்றது என the Commons Public Accounts Committee (PAC) தெரிவித்துள்ளது.
பயன்படுத்து முடியாத கிட் மதிப்பு ஜனவரி மாதம் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை மதிப்பிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம் என்று பொது செலவினங்களை கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.
வீணான தொகை, தொற்றுநோயை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக பிரித்தானியா செலவழித்த 372 பில்லியன் பவுண்ட் ஒரு பகுதியாகும்.
இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீண்டெழ பல ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        