கொழும்பில் பரபரப்பு... போராட்டகாரர்களை சரமாரியாக தாக்கிய அரசு ஆதரவாளர்கள்! வீடியோ ஆதாரம்
இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டகாரர்களை அரசு ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்கள் கொழும்பில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கோட்டபய ராஜபச்ச அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, இன்று கொழும்பில் உள்ள பிரதமர் இல்லதத்தில் பிரதமர் மகிந்தா ராஜபக்ச உடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tense situation near Temple Trees, Journalist assualted pic.twitter.com/k37j97RsuN
— NewsWire ?? (@NewsWireLK) May 9, 2022
போரில் உக்ரைனிடம் ரஷ்யா தோற்கும்! ஜெலன்ஸ்கி கூறிய காரணம்
இதைத்தொர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் காலி முகத்திடலுக்கு சென்ற அங்கு அமைதி வழியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், போராட்டத்திற்கு உதவிய பொருட்களை அகற்றி தீ வைத்து கொழுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இச்சம்பவத்தை பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்கள் மீதும் அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய கூறப்படுகிறது.
Footage of Government supporters assaulting protester at "GotaGoGama" pic.twitter.com/nAxkbQi1nX
— NewsWire ?? (@NewsWireLK) May 9, 2022