ஒலிம்பிக் நேரத்தில் விடுப்பு கிடையாது என அரசு அறிவிப்பு: பிரான்ஸ் பொலிசார் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ் பொலிசார் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
ஒலிம்பிக் நேரத்தில் விடுப்பு கிடையாது என அரசு அறிவிப்பு
இந்த ஆண்டு ஜூலை 24 முதல் ஆகத்து 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த நேரத்தில் பொலிசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும், பெரும்பாலான பொலிசார் ஒலிம்பிக் போட்டிகளின்போது பாரீஸில் இருக்கவேண்டும் என்பதால், அனைத்து பொலிசாரும் பணிக்கமர்த்தப்படுவார்கள் என்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Photograph: Sébastien Bozon/AFP/Getty Images
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம்
2015 தீவிரவாத தக்குதல்களைத் தொடர்ந்து, மஞ்சள் ஆடை போராட்டம், கோவிட் நெருக்கடி, ஓய்வூதிய மாற்றத்தை எதிர்த்து போராட்டங்கள் என அனைத்து போராட்டங்களின்போதும் பொலிசார் பணியில் ஈடுபட நேர்ந்தது. 2023இலும் கலவரங்களால் பொலிசாருக்கு ஓய்வில்லை. ஆக, எப்போதுதான் எங்களுக்கு ஓய்வு என்கிறார்கள் பொலிசார்.
இதுபோக, போனஸ், கோடையின்போது தங்கள் குழந்தைகளுக்கான உதவி என பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணி நிறுத்தம், பொலிஸ் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் என தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் ‘கருப்பு வியாழனாக’ அனுசரித்து வருகிறார்கள் பொலிசார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |