இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும்.., தேர்தலுக்கு தயாராகுங்கள்:லாலு பிரசாத் யாதவ் உறுதி
வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சி கவிழும் என்றும், தேர்தலுக்கு தயாராக இருங்கள் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.
ஆனால், இந்தியா கூட்டணி 234 இடங்களுடன் மிகப்பெரிய பலத்துடன் எதிர்க்கட்சியாக உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 98 இடங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து பாஜக கூட்டணியில் உள்ள ,சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
ஆட்சி கவிழும்
இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவரும், பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "டெல்லியில் மோடியின் அரசு பலவீனமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சி கவிழும். இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும். இதனால் தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக இருங்கள்" என்றார்.
இவரின் கருத்துக்கு லாலு பிரசாத் யாதவ் பகல் கனவு காண்பதாக பாஜக அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |