ஆளுநர் என்றால் அதன் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: சீமான் காட்டம்
ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
சீமானின் காட்டம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ''ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா?
ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும், இதற்கு முன்பு இப்படியெல்லாம் குண்டு வீசினார்களா? என்னத்தையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் ஆளுநர் பேசிக் கொண்டு இருக்க கூடாது'' என கூறியுள்ளார்.
நீட் தேர்வு
தேர்தல் நேரத்தில் எப்போதும் நடத்தும் நாடகத்தை திமுக நடத்துகிறது.
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது நளினி சிதம்பரம், நீட் வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் பேசி உள்ளார் என்றும் சீமான் கூறியுள்ளார்.
மேலும் ஆளுநரை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் மாற்றுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் மாற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |