பாம்பை சீண்டுவது போல ஆளுநரை சீண்டினால் கொத்த தான் செய்வார்! திமுகவை அண்ணாமலை சாடல்
பாம்பை சீண்டுவது போல திமுக ஆளுநரை சீண்டினால் கொத்த தான் செய்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இஸ்ரோவை தடுத்தது திமுக
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது," தமிழகத்தில் உள்ள நாகபட்டினத்திற்கு வரவேண்டிய இஸ்ரோ, அப்போதைய திமுக அரசின் தவறான நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்றது என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
சந்திரயான் 1,2,3 என 3 தமிழர்களும் தேசியத்தை நம்புவது மட்டுமல்லாமல், தன்னை தாண்டி பாரத நாடு என்று நினைக்கக்கூடியவர்கள். அவர்கள் நமக்கு உணர்த்துவது, கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை என நம்மை சுருக்கிக் கொள்ளக் கூடாது என்பது தான்" என்று கூறினார்.
நீட் தேர்வில் ஆளுநர் மீது தவறில்லை
மேலும் பேசிய அவர்,"நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது எந்த தவறுமில்லை. திமுக தேவையில்லாமல் ஆளுநரை வம்பிழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். பாம்பை சீண்டுவது போல திமுக ஆளுநரை சீண்டினால் கொத்த தான் செய்வார்.
ஆளுநரை பற்றி சம்மந்தமில்லாமல் பேசுவது தவறு. அவருக்கு கறுப்புக்கொடி காட்டுவதால் எந்த பயனும் இல்லை. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, பீகாருக்கு ஆளுநர் அழைத்தால் இந்தி தெரியாமல் திமுக என்ன செய்வார்கள்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |