பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல்
Govenment approves plans to house more than 1,250 asylum seekers near Piddington: பிடிங்டன் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தியது நினைவிருக்கலாம்.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன். வெறும் 350 பேர் வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்ததால் கோபமடைந்த அக்கிராம மக்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தினர்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதால், தங்கள் கிராமத்தின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதிக்கப்படும் என அஞ்சுவதாகவும், ஆகவே, பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் 312 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 285 பேர் பிடிங்டன் கிராமம் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவாகவும், 26 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
எதிர்ப்பை மீறி...
இந்நிலையில், பிடிங்டன் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு புகலிடக்கோரிக்கை மையம் அமைக்க அனுமதி அளித்துள்ளார் வீட்டுவசதித்துறைச் செயலரான ஏஞ்சலா ரெய்னர்.

அது குறித்து பேசிய வீட்டுவசதித்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், பிடிங்டனுக்கு அருகில் புகலிடக்கோரிக்கையாளர் மையம் அமைப்பதற்கான திட்டத்துக்கு, மாகாணச் செயலர் முழு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.