பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள்

Delhi India Uber
By Karthikraja Feb 06, 2026 08:41 AM GMT
Report

அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பாரத் டாக்ஸி சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாடகை வாகன சந்தையில் தனியார் ஆதிக்கம்

இந்தியாவில், வாடகை வாகன சந்தையில், OLA, Uber போன்ற தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள் | Govt Backed Bharat Taxi Launched In Delhi Price

இதில், கட்டணம் அதிகம் இருப்பதாகவும் பீக் நேரங்கள் மற்றும் மழை நேரங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

இதே போல், இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக அந்த நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். 

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள் | Govt Backed Bharat Taxi Launched In Delhi Price

கமிஷன் தொகை அதிகளவில் வசூலிக்கப்படுவதாக தங்களுக்கு பெரிதாக லாபம் கிடைப்பதில்லை என ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா?

அதிக பில்லியனர்கள் உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவில் இத்தனை பேரா?

இதனை கண்டித்து நாடு தழுவிய அளவில் பிப்ரவரி 7 ஆம் திகதி இந்த நிறுவனங்களின் கீழ் வாகனங்களை இயக்கம் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பாரத் டாக்ஸி

இந்த நிலையில், இந்திய அரசு பாரத் டாக்ஸி(Bharat Taxi) என்ற டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள் | Govt Backed Bharat Taxi Launched In Delhi Price

இந்த சேவையானது, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்துடன் (NCDC) இணைந்து பல மாநில கூட்டுறவு சங்கமான சஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் (STCL) ஆல் இயக்கப்படுகிறது. 

முதற்கட்டமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இந்த சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

ஓட்டுநர்களுக்கான சிறப்பம்சங்கள்

இதில் தனியார் செயலிகளை போல், வாகன ஓட்டுநர்கள் கமிஷன் செலுத்த வேண்டியதில்லை. அதேவேலையில் நாளொன்றுக்கு இதில் வாகனத்தை இயக்க ஓட்டுனர்கள் ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். 

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள் | Govt Backed Bharat Taxi Launched In Delhi Price

மேலும், ஓட்டுநர்களுக்கு ரூ .5 லட்சம் தனிநபர் விபத்துக் காப்பீடு,ரூ .5 லட்சம் குடும்ப மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

மேலும், பெண் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்க தனி பிரிவும் இதில் உள்ளது. இதில் 150க்கும் அதிகமான பெண் ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர்.

பயணிகளுக்கான சிறப்பம்சங்கள்

இதனால் பயணிகளுக்கான கட்டணம் தனியார் செயலிகளை விட 30% குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள் | Govt Backed Bharat Taxi Launched In Delhi Price

இதில் பதிவு செய்துள்ள ஓட்டுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும். அதே போல், செயலியில் SOS பொத்தான் இருக்கும். ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ள இதனை அழுத்தினால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பயணிகளின் புகார்களை தீர்க்க மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த டெல்லி காவல்துறையுடன் இணைந்து 35 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சோதனை ஓட்டமாக கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி மற்றும் குஜராத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஏற்கனவே 4 லட்சம் ஓட்டுநர்கள் பதிவு செய்து, நாளொன்றுக்கு சுமார் 10,000 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2029 ஆம் ஆண்டிற்குள் இந்த பாரத் டாக்ஸி சேவை படிப்படியாக இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US