புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக அரசு எடுத்துள்ள நல்ல முடிவு: ஆத்திரத்தில் பிரித்தானியர்கள்
மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், அரசின் இந்த முடிவு உள்ளூர் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு எடுத்துள்ள நல்ல முடிவு
முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புகலிடக்கோரிக்கையாளர்களை Portland என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள, Bibby Stockholm என்னும் மிதக்கும் படகில் தங்கவைத்தது.
ஆனால், புதிய லேபர் அரசோ, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அவர்களை ஹொட்டல்கள் மற்றும் வீடுகளில் குடியமர்த்த முடிவு செய்துள்ளது. அவர்களில் சுமார் 400 பேர் தற்போது அந்த படகுகளிலிருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
சிலர் Wolverhampton என்னுமிடத்திலுள்ள ஹொட்டல் ஒன்றிலும், மற்றவர்கள் Worksop என்னுமிடத்தில் வீடுகளிலும் தங்கவைக்கப்பட இருக்கிறார்கள்.
ஆத்திரத்தில் பிரித்தானியர்கள்
ஆனால், அரசின் இந்த முடிவு உள்ளூர் மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி கவுன்சிலரான Fraser McFarland என்பவர், இது அதிர்ச்சியளிக்கவைக்கும் துரோகம் என்று கூறியுள்ளார்.
எங்கள் மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை, அவர்கள் குளிரில் அவதியுறும்போது, லேபர் அரசு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை Bassetlawவிலுள்ள வீடுகளில் குடியமர்த்துகிறது என கொந்தளிக்கிறார் அவர்.
அத்துடன், உள்ளூரில் வாழும் எங்கள் குடும்பங்கள் தங்க சரியான வீடில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. ஆனால், எங்களுக்கு முன்னால் இந்த புலம்பெயர்ந்தோருக்கு வீடுகள் கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம் என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் உள்ளுர்வாசி ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |