பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயன்ற அரசு மருத்துவர்: பெற்றோர் எடுத்த முடிவு
தமிழக மாவட்டம் நாமக்கல்லில், பேரம் பேசி குழந்தையை விற்க முயன்ற அரசு மருத்துவரை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
குழந்தை விற்பனை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்த தம்பதியினர் தினேஷ் (29) மற்றும் நாகஜோதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12 -ம் திகதி நாகஜோதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த அரசு மருத்துவமனையில் அனுராதா என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த மருத்துவர், தம்பதியரின் குழந்தையை வேறொரு நபருக்கு விற்பனை செய்ய பேரம் பேசியுள்ளார்.
அமைச்சரின் முடிவு
அதாவது, மருத்துவர் அனுராதா, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவருக்கு இது தொடர்பாக பேசியுள்ளார். மேலும், தினேஷ் மற்றும் நாகஜோதி தம்பதியிடம் குழந்தையை விற்பனை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால், குழந்தையின் பெற்றோர் நாமக்கல் கலெக்டர் மற்றும் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அனுராதா மற்றும் லோகாம்பாள் ஆகிய இருவரை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அரசு மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |