வாட்ஸ்அப் மோசடியால் ரூ.1.9 லட்சத்தை பறிகொடுத்த அரசு ஊழியர்
உலகமே டிஜிட்டல் மயமாக மாறிவரும் நிலையில் அனைத்து துறைகளிலும் வேலைகள் எளிதாகி விட்டன. ஆனால், அப்படி எளிதாக மாறினாலும் மக்களுக்கு பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன.
வாட்ஸ்அப் எச்சரிக்கை
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் ஒருவர் தனது வாட்ஸ்அப்பில் இ-கார்டைப் பெற்று ரூ.1.9 லட்சத்தை இழந்துள்ளார், அரசு ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்தது.
அச்செய்தியில் ஒரு திருமண அழைப்பிதழ் அட்டையும், அவரை திருமணத்திற்கு அழைக்கும் ஒரு சிறிய செய்தியும் காட்டப்பட்டது.
மேலும் அந்த செய்தியில், “வரவேற்கிறேன், திருமணத்திற்கு வாருங்கள் என குறிப்பிடப்பட்டிருந்ததோடு செய்தியின் கீழே திருமண அழைப்பிதழ் அடங்கிய ஒரு PDF கோப்பு இருந்தது.
இந்தக் கோப்பு திருமண அட்டைகளின் வடிவத்தில் Android Application Package (APK) ஆக இருந்தது. இது பயனர்களின் தொலைபேசிகளை hack செய்து முக்கியமான தரவுகளைத் திருட வடிவமைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அரசு ஊழியர் ஆர்வத்துடன் கோப்பை திறந்த போது அவரிடம் இருந்த ரூ.1,90,000-யை திருடினர்.
பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில், ஹிங்கோலி காவல் நிலையத்திலும், சைபர் செல் துறையிலும் அடையாளம் தெரியாத ஒரு நபர் மீது சைபர் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சைபர் மோசடி தொடர்பான திருமண அழைப்பிதழ் மோசடியில் பலர் தங்கள் பணத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |