இனி ஆதார் கார்டு தேவையில்லையா? அரசின் அசத்தல் திட்டம்
இந்திய அரசு ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார்
இந்தியாவில் சிம் கார்டு வாங்குவது தொடங்கி, வங்கி கணக்கு தொடங்குவது, அரசு திட்டங்களில் இணைவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. இதனால் பல்வேறு சேவைகளை பெற, ஆதார் நகலை அளிக்க வேண்டியுள்ளது.
வெளியூர் செல்லும் போது ஹோட்டலில் அறை எடுத்து தங்குவது போன்றவற்றிற்கும், ஆதார் நகலை கையிலே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
தற்போது இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் செயலி
Gpay, PhonePe மூலம் எளிதாக பணப்பரிமாற்றம் செய்வது போல், இந்த செயலியை பயன்படுத்தி எளிதாக ஆதார் சரிபார்க்கும் பணியை முடித்து விடலாம்.
இனி ஹோட்டல், கடைகள், அரசு அலுவலங்களில் ஆதார் நகலை வழங்க தேவையில்லை. இந்த செயலியை பயன்படுத்தி, ஆதார் சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.
க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் உள்ள "தேவையான தரவை மட்டும் பகிர" என்ற ஒரு அம்சம், சம்பந்தப்பட்ட நபர் எந்த அளவிற்கான தகவல்களை மட்டும் பகிர வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது.
முக அங்கீகாரம் (Face Authentication), அம்சம் மூலம் இந்த செயலியில் முகத்தை காட்டி உள்நுழைய முடியும் என்பதால் பிறரால் தவறாக பயன்படுத்த முடியாது.
ஆதார் கார்ட் தொலைந்து போவது, போலியான ஆதார் கார்டுகளை உருவாக்கி மோசடியில் ஈடுபடுவது. தனிப்பட்ட தகவல்கள் கசிவது உள்ளிட்டவற்றை இதன் மூலம் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
New Aadhaar App
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
Face ID authentication via mobile app
❌ No physical card
❌ No photocopies
🧵Features👇 pic.twitter.com/xc6cr6grL0
புது டெல்லியில் நடந்த ஆதார் சம்வாத் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது, இந்த செயலி சோதனை அடிப்படையில் Beta பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில், பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |