4 ஆண்டுகளில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை.., சாதனை படைத்த இந்திய மாநிலம்
கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை பெற்று கொடுத்து இந்திய மாநிலம் சாதனை படைத்துள்ளது.
இளைஞர்களுக்கு அரசு வேலை
இந்திய மாநிலமான உத்தரகாண்டில் கடந்த 2021-ம் ஆண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. அப்போது இருந்து மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதோடு, தேர்வுகளில் வினாத்தாள் முன்கூட்டி கசிவதைத் தடுக்க யும் மோசடி எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வந்தார் புஷ்கர் சிங் தாமி.
இந்த சட்டத்தின் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.
அதோடு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரசு ஆசிரம முறையிலான பள்ளிகளில் 15 உதவி ஆசிரியர்களுக்கு பணி நியமனங்களை வழங்கினார் புஷ்கர் சிங் தாமி.
மேலும், உத்தராகண்ட் உதவி சேவைத் தேர்வு ஆணையம் மற்றும் மாநில மருத்துவ சேவைகள் தேர்வு ஆணையத்தின் கீழ் பல்வேறு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர முதல்வரின் திறன் வளர்ப்பு மற்றும் உலக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |