கரீபியன் நோக்கிப் புறப்பட்ட அரசு விமானம்... மான்செஸ்டருக்குத் திரும்பிய பின்னணி
Government plane flying to Caribbean diverts to Manchester: அரசு விமானம் ஒன்று கரீபியனுக்குச் செல்ல இருந்த நிலையில், மான்செஸ்டர் நோக்கித் திரும்பியுள்ளது.
பிரித்தானிய அரசு விமானம் ஒன்று கரீபியனுக்குச் செல்ல இருந்த நிலையில், மான்செஸ்டர் நோக்கித் திரும்பிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மான்செஸ்டர் நோக்கித் திரும்பிய விமானம்
லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலிருந்து இன்று காலை அரசு விமானம் ஒன்று ஆன்டிகுவா தீவை நோக்கிப் புறப்பட்டது.

ஆனால், அது நேரடியாக ஆன்டிகுவாவுக்குச் செல்லாமல், வழியில் சற்றே திரும்பி மான்செஸ்டருக்குச் சென்றுள்ளது.
வேறொன்றுமில்லை! ஆன்டிகுவாவில் காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்.
ஆக, ஆன்டி பர்னாமை அவரது வீட்டிலிருந்து ஏற்றிக்கொள்வதற்காகத்தான் அந்த அரசு விமானம் மான்செஸ்டருக்குச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்தைத்தான் தி ஸ்கை நியூஸ் என்னும் பிரித்தானிய ஊடகம் வேடிக்கையாக இப்படி ஒரு செய்தியாக வெளியிட்டுள்ளது.
அடுத்து கனடாவுக்குச் செல்லும் அந்த விமானம், அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு ஆன்டிகுவாவுக்குச் செல்ல உள்ளது.
ஆன்டிகுவாவில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவுடன் பிரதமர் ஆன்டி பர்னாமும் அவரது மனைவியும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.