சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையில் 200 போர்க்கப்பல்களை சேர்க்க அரசு திட்டம்
சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்க 200 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சேர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய கடற்படை திட்டம்
சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவின் கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்திய கடற்படையில் 200 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சேர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, 2035 ஆம் ஆண்டுக்குள், இந்திய கடற்படை 200 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் சேர்க்க இலக்கு வைத்துள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் கடல் வளத்தை பாதுகாப்பது அவசியமானதாக மாறிவிட்டது.
அதன்படி, இந்தியாவில் தற்போது கடற்படைக்கு தேவையான 55 பெரிய மற்றும் சிறிய போர்க்கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன. அவற்றின் மொத்த செலவு தோராயமாக ரூ.99,500 கோடி.
இதனை தவிர உள்நாட்டிலேயே கூடுதலாக 74 போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. இதன் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.2.35 லட்சம் கோடி.
ஒப்பந்த கையொப்பங்களுக்காக காத்திருக்கும் திட்டங்களில் 9 டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள், 7 அடுத்த தலைமுறை multi-role stealth போர் கப்பல்கள், 8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் corvettes மற்றும் 12 கண்ணிவெடி எதிர் நடவடிக்கை கப்பல்கள் ஆகியவை அடங்கும்.
40,000 டன் ஐஎன்எஸ் விக்ராந்தைத் தொடர்ந்து, வயதான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை மாற்றுவதற்காக, இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே கட்டமைக்க கடற்படை தயாராகி வருகிறது.
இதுகுறித்து மூத்த அதிகாரி கூறுகையில், "கடற்படையை ஒரே இரவில் கட்டமைக்க முடியாது. இதற்கு பல வருட திட்டமிடல் மற்றும் கட்டுமானம் தேவைப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றுடன், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் SSBNகளை (பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள்) வடிவமைக்கவும், கட்டவும் மற்றும் இயக்கவும் திறன் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் இப்போது உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |