இனி ஏடிஎம்களில் ரூ.10, ரூ.20, ரூ.50 கிடைக்கும் - மத்திய அரசின் புதிய திட்டம்
ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்களை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஏடிஎம்களில் ரூ.10, ரூ.20, ரூ.50
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் UPI எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறி விட்டாலும், இன்னும் பணத்தை ரொக்கமாக பயன்படுத்தும் தேவையும் உள்ளது.
அதேவேளையில், ஏடிஎம்களில் ரூ.500 ,ரூ.200, ரூ.100 தான் கிடைப்பதால் ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை பெறுவதில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை சரி செய்யும் வகையில், ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய சிறிய நோட்டுகளை வழங்கும் ATM களை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த ATM இயந்திரத்தில், ரூ.100, ரூ.500 போன்ற தொகையை உள்ளே செலுத்தி, ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய சிறிய நோட்டுகளை பெற முடியும்.
முதற்கட்டமாக, மும்பையில் மக்கள் அதிகம் புழங்கும் மார்க்கெட், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்த இயந்திரத்தை நிறுவி சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தால், நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப கூடுதலாக ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை அச்சடிக்க தயாராகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |