ATM, UPI செயலிகள் மூலம் PF பணம் எடுக்கலாம் - எப்போது முதல் தெரியுமா?
ATM, UPI செயலிகள் மூலம் PF பணம் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
UPI செயலிகள் மூலம் PF
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள் , தங்கள் பிஎஃப் கணக்கை எளிதாக நிர்வகிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி PF சந்தாதாரர்கள், GooglePay, Paytm, PhonePe போன்ற UPI செயலிகள் மூலம் தங்கள் PF பணத்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, EPFO, தேசிய கொடுப்பனவு கழகத்துடன்(NCPI) ஆலோசனை நடத்தி வருகிறது.
ATM மூலம் PF
மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக PF பணத்தை எடுக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்த நிலையில், இந்த திட்டம் அமலுக்கு வந்தால் சில நிமிடங்களில், PF சந்தாதாரர்கள் பணத்தை பெற முடியும்.
கடந்த ஜனவரி மாதம் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, EPFO3.0 திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்குள் ATM மூலம் PF பணம் எடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |