3 இல் 2 கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு - பேச்சுவார்த்தைக்கு பின் CJP தகவல்
மத்திய அரசு, 3 இல் 2 கோரிக்கைக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக பேச்சுவார்த்தைக்கு பின் CJP தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் CJP பேச்சுவார்த்தை
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.

போராடியவர்கள் மீது தடியடி நடத்திய பின்னர், இந்த போராட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று அரசுடன் CJP பிரதிநிதிகள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டனர். CJP தரப்பில், அதன் செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், 3 கோரிக்கைகள் மற்றும் 5 சீர்திருத்த பரிந்துரைகளையும் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
3 கோரிக்கை என்ன?
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய CJP செய்தித் தொடர்பாளர்கள்,"எங்களது 3 கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளோம்.
சமரசத்திற்கு இடமில்லாத முதல் கோரிக்கை என்னவென்றால், தர்மேந்திர பிரதான் ஒன்று ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அரசு அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது, போராடியவர்கள் மீது பதியப்பட்ட FIR மற்றும் வழக்குகளை திரும்ப பெறுவது ஆகிய 2 மற்ற கோரிக்கைகளுக்கு அரசு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
தர்மந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு, நாளை மதியம் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது. அவரை விரைவில் பதவியிலிருந்து நீக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |