தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் - அரசாங்கம் எடுத்த திடீர் முடிவு
தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகளின் வீசா காலாவதியான பின்னர் அவர்களை நாடு திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எடுத்த திடீர் முடிவு
அவர்களின் விபரங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுப்பிவைக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கான எதிர்கால வேலை ஒதுக்கீடுகள் ஏற்கனவே அங்கு பணிபுரிபவர்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் என்பதால், காலாவதியான வீசாவைக் கொண்ட நபர்கள் சட்டவிரோதமாக அங்கு தங்க வேண்டாம் என்று விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று (07) தென்கொரியாவிற்கு உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கு விமானப் பயணச்சீட்டுகளை வழங்கிவைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு (2025) தென் கொரியாவின் உற்பத்தித் துறையில் வேலைக்காக வெளியேறும் முதல் குழுவாகும்.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேலும் வெளிப்படுத்தினார்.
தென் கொரியாவிற்கு தொழிலாளர்களை வழங்கும் 16 நாடுகளில் ஒன்றான இலங்கையிலிருந்து திறமையான, உயர்தர பணியாளர்களை அனுப்ப பணியகம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வருடாந்தம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பும் புலம்பெயர்ந்த இலங்கையர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வலியுறுத்தினார், தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அவர்களுக்கு அரசாங்கத்தின் நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |