ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்தியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் பதற்றம்
ஈரான் - அமெரிக்கா இடையே சமீப காலமாக மோதல் போக்கானது தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்கா ஈரானின் கடல் பிராந்தியத்திற்கு அருகே அமெரிக்க கடற்படை தங்களது கப்பல்களை நிலை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே சமயம், ஈரான் நாட்டு தலைவர்களுக்கு எதிராக உள்நாட்டு மக்கள் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக கிடைக்கும் வணிக ரீதியான விமானங்கள் அல்லது இதர போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி காலதாமதம் உடனடியாக இந்தியாவுக்கு திரும்புமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
விரைவாக கிடைக்கும் விமானங்களில் இந்தியாவுக்கு திரும்புங்கள்.
பொது இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
கடவுச்சீட்டு மற்றும் விசா ஆவணங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் நிலையில் இருக்குமாறு பாதுகாத்துக் கொள்ளவும்.
இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய விவரங்களை உடனடியாக தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கான பிரத்யேக அவசர கால உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |