Tesla கார்கள் இந்தியாவுக்கு எப்போது வரும்? யூடியூபர் மதன் கெளரிக்கு எலான் மஸ்க் பதில்
இந்தியாவில் மற்ற உலக நாடுகளை விட இறக்குமதி வரி மிகவும் அதிகம் என Tesla நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், டெஸ்லா கார்களை இந்தியாவில் விரைவில் தொடங்குமாறு எலன் மஸ்க் அவர்களை டேக் ட்வீட் செய்து இருந்தார்.
அதற்கு எலான் மஸ்க் பதில் அளித்திருக்கிறார்.அதில், "நாங்களும் அதை செய்ய தான் விரும்புகிறோம். ஆனால், இந்தியாவில் இருக்கும் இறக்குமதி வரி என்பது உலகிலேயே எந்தவொரு பெரிய நாட்டையும் விட மிக அதிகமாக இருக்கிறது.
மேலும், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைக் கூட டீசல் அல்லது பெட்ரோல் வாகனத்தை போலவே கருதுகின்றனர். இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை" என்கிறார்.
"எனினும், மின்சார வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிக கட்டண நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என எலன் மஸ்க் பதிலளித்துள்ளார்.
மேலும் "இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுடன் டெஸ்லா வெற்றிபெற முடிந்தால், இந்தியாவில் விரைவில் ஒரு தொழிற்சாலை மிகவும் சாத்தியமாகும்" என்று கூறியுள்ளார்.
We want to do so, but import duties are the highest in the world by far of any large country!
— Elon Musk (@elonmusk) July 23, 2021
Moreover, clean energy vehicles are treated the same as diesel or petrol, which does not seem entirely consistent with the climate goals of India.