''என் அம்மாவின் மறைவிற்கு பிறகு விஜயகாந்த் மறைவுக்கு அதிகம் அழுதேன்''- கண்ணீருடன் ஜி.பி. முத்து
பிரபல யூடியூபரும் நடிகருமான ஜி.பி. முத்து மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமாதியில் அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார்.
ஜி.பி.முத்து
சமூக வலைத்தளமான டிக்டாக், இதனைத்தொடர்ந்து யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி. முத்து.
இதன்மூலம் கிடைத்த புகழ் மூலம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
நாளடைவில் தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட், பம்பர், துணிவு ஆகியப் படங்களில் சிறுவேடங்களில் நடித்தார் ஜி.பி.முத்து. இதைதவிர, பல்வேறு இடங்களில் கடை திறப்பு விழாவுக்கும் சென்று வருகிறார்.
இந்நிலையில், ஜி.பி. முத்து, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமாதியில் அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். பின்பு அவர் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது..,
''விஜயகாந்த் படங்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். படத்தில் அவர் நல்லது செய்வார். நிஜத்திலும் நல்லது செய்திருக்கிறார்.
அவரைப் போன்று நல்ல விஷயங்கள் நாமும் பண்ண வேண்டும். நாமும் ஏழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும். அந்த ஆசையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அவரை தொட்டு வணங்கினேன்.
அவர் உயிருடன் இருக்கும் போதுதான் பார்க்க முடியவில்லை. நினைவிடத்திற்கு நான் வந்திருப்பது எனக்கு சந்தோசம் அளிக்கிறது.
எனது அம்மாவுக்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் மறைந்தது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ரொம்ப கண்ணீர் விட்டேன். அவ்வளவு நல்ல மனிதர் விஜயகாந்த்.
எனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து விஜயகாந்துடைய நினைவிடத்தை பார்ப்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்'' என்று ஜி.பி. முத்து தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |