புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் - தீர்வு காணும் அமைச்சு
2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் வினாக்கள் கசிந்ததாகக் கூறப்படும் கேள்விகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஊடாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது குறித்து விசாரணைகளின் முடிவுகளைப் பரிசீலித்து உடனடியாகத் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நியாயமான தீர்வு எட்டப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |