லண்டனில் இரண்டு இளைஞர்கள் தீவிரவாதியால் குத்திக் கொல்லப்பட்டதற்கு இது தான் முக்கிய காரணம்! நடுவர் மன்றம் பரபரப்பு தகவல்
2019 நவம்பரில் லண்டனில் நடந்த கைதிகள் மறுவாழ்வு நிகழ்வில் தண்டனை பெற்ற தீவிரவாதியால் கொல்லப்பட்ட இரண்டு பட்டதாரிகளின் மரணங்களுக்கு அரசு நிறுவனங்களின் தோல்வியே முக்கிய காரணம் என நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது.
2019 நவம்பரில் Saskia Jones (23), மற்றும் Jack Merritt (25) ஆகியோர் Fishmongers ஹாலில் தண்டனை பெற்ற தீவிரவாதி உஸ்மான் கானால் குத்திக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாத பயிற்சி முகாம் அமைக்க திட்டமிட்டதற்காக எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் Stafford-ச் சேர்ந்த உஸ்மான் கான் 2018 டிசம்பரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2019 நவம்பரில் Fishmongers ஹாலில் நடந்த கைதிகள் மறுவாழ்வு நிகழ்வில் கலந்துக்கொண்ட உஸ்மான் கான், Saskia Jones (23), மற்றும் Jack Merritt (25) ஆகியோரை குத்திக் கொன்றான்.
Fishmongers ஹாலில் இருந்து தப்பிச்சென்ற உஸ்மான் கானை லண்டன் பிரிட்ஜில் வைத்து பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
இரண்டு பட்டதாரிகளின் மரணங்களுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய நடுவர் மன்றம், Saskia Jones (23), மற்றும் Jack Merritt (25) இருவருமே சட்டவிரோதமாக தீவிரவாதியால் கொல்லப்பட்டதாக முடிவு செய்தனர்.
தண்டனை பெற்ற பயங்கரவாதியைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள அரசு நிறுவனங்களுக்கிடையில் தகவல்களைப் பகிர்வதில் தோல்விடைந்திருப்பதாக ஜூரிகள் முடிவு செய்தனர்.
Fishmongers ஹாலில் நிகழ்வின் அமைப்பில் உள்ள குறைபாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது உட்பட, இரண்டு உயிரிழப்புக்கு ஒரு காரணியாக இருப்பதை நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது.