ரயில் தண்டவாளத்தில் தடுமாறிக்கொண்டிருந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம்: அமைச்சர்கள் இரங்கல்
பிரித்தானியாவில், ரயில் தண்டவாளத்தில் தடுமாறிக்கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசார் ஒருவர் மீது ரயில் மோதியது.
பொலிசார் மீது மோதிய ரயில்
இங்கிலாந்திலுள்ள Balderton என்னுமிடத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் ஒருவர் தடுமாறியபடி நிற்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை மாலை 7.10 மணியளவில் இந்த தகவல் கிடைத்ததையடுத்து Sgt Graham Saville (46) என்னும் பொலிசார் அங்கு விரைந்துள்ளார்.
அங்கு ரயில் தண்டவாளத்தில் நின்ற நபரைக் காப்பாற்ற முயன்ற Sgt Saville மீது ரயில் மோதியுள்ளது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று, குடும்பத்தார் சூழ, அவரது உயிர் பிரிந்துள்ளது.
அமைச்சர்கள் இரங்கல்
உயிரிழந்த Sgt Savilleக்கு, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முதல் பல்வேறு அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் ரிஷி X இல் வெளியிட்டுள்ள செய்தியில், Sgt Savilleஇன் மரணச் செய்தி கேட்டு தான் கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், கடமையைச் செய்யும்போது உயிரிழந்த அவரது தைரியத்துக்கு இது அடையாளம் என்றும், நம்மை பாதுகாக்க பொலிசார் செய்யும் வேலையைக் குறித்து நமக்கு ஒரு நினைவூட்டலும் என்றும் கூறியுள்ளார்.
என்றும், நம்மை பாதுகாக்க பொலிசார் செய்யும் வேலையைக் குறித்து நமக்கு ஒரு நினைவூட்டலும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன், Newark பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Robert Jenrick, பொலிஸ் துறை அமைச்சரான Chris Philp ஆகியோரும், Sgt Savilleஇன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |