ஒரே ஒரு காரணம்... பிரித்தானியாவில் மருமகளின் கெளரவ கொலைக்கு காரணமான பெண்மணி விடுவிப்பு
பிரித்தானியாவில் விவாகரத்து கோரிய ஒரே காரணத்திற்காக சொந்த மருமகளை கொலை செய்ய திட்டம் வகுத்த பெண்மணி ஒருவர், தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கெளரவ கொலை செய்த குற்றத்திற்காக
மேற்கு லண்டனை சேர்ந்த Bachan Kaur Athwal என்பவரே, 27 வயதான Surjit Athwal என்பவரை கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக 2007ல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Credit: Handout
1998ல் தமது மருமகளான Surjit Athwal என்பவரை கெளரவ கொலை செய்த குற்றத்திற்காக சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்ட அவர், வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரை விடுவிக்காமல் இருக்க நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் மேற்கொண்ட முயற்சிகள் வீணானதாகவே கூறப்படுகிறது. தற்போது 86 வயதான Bachan Kaur Athwal தமது மருமகளுக்கு இன்னொருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதும், அதன்பொருட்டு தமது மகனை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிந்துகொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தங்கள் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் என கருதிய Bachan Kaur Athwal தமது மருமகளான Surjit Athwal என்பவரை இந்தியாவுக்கு வரவழைத்து கெளரவ கொலைக்கு திட்டமிட்டுள்ளார்.
Credit: Fabulous
குடும்பத்தின் பெருமையை காப்பாற்றவே கொலை
ஆனால், Surjit Athwal என்பவரது கொலை உறுதி செய்யப்பட்டாலும், இதுவரை அவரது சடலம் மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. குடும்பத்தின் பெருமையை காப்பாற்றவே கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது உறவினர் ஒருவரிடம் இதை குறிப்பிட்டு, எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால் தமது உயிருக்கு பயந்த அந்த உறவினர், குறித்த தகவலை ரகசியமாக பொலிசாரிடம் தெரிவித்ததுடன், Bachan Kaur Athwal என்பவருக்கு தண்டனை பெற்றுத்தரவும் விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைத்துள்ளார்.
தற்போது மறதி நோய் காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் அவரை விடுவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே Bachan Kaur Athwal சிறையில் இருந்து வெளியேறிவிட்டார் என்றே கூறப்படுகிறது.
Image: central news
இப்படியான நபர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் எச்சரிக்கை விடுத்தும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில கட்டுப்பாடுகளுடன் Bachan Kaur Athwal குடும்பத்தினரால் கவனிக்கப்பட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.