மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மகனின் திருமண வரவேற்பு பிரம்மாண்ட முறையில் நடைபெற இருக்கிறது.
திருமண வரவேற்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மகன் விஜய் விகாஷ் என்பவருக்கு தீக்ஷனா என்பவருடன் கடந்த மார்ச் 3-ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அதிமுக கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 10) கோவை கொடிசியா ஹாலில் வேலுமணி மகன் விகாஷ திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
மேலும், அதிமுக உறுப்பினர்களுக்கும் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை கட்சி மாநாடு போல பிரமாண்டமாக நடத்துகிறாராம் வேலுமணி. அப்போது, எடப்பாடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இதற்காக கொடிசியா வளாகத்தில் ஏ,பி,சி ஆகிய மூன்று ஹால்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்வில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மன வருத்தத்தில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேச வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் 30 வகை உணவுகள் மூன்று ஹால்களிலும் பஃபே முறையில் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க பிரமாண்ட நுழைவு, 100 அடி உயரத்தில் பேனர் மற்றும் கட்அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |