கனடாவில் புதிய வரலாறு படைத்து சாதித்த தமிழக வீரர்
கனடாவில் நடைபெற்ற Candidates Chess தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
Candidates Chess சாம்பியன்ஷிப் போட்டி கனடாவின் டொராண்டோவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (17) கலந்துகொண்டார்.
தன்னை எதிர்த்து விளையாடிய நகமுராவை (அமெரிக்கா) வீழ்த்தி 9 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். 14 சுற்றுகள் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளும், நகமுரா 8.5 புள்ளிகளும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் தற்போதைய உலக சாம்பியன் டிங் லிரேனுக்கு (சீனா) எதிராக மோதும் தகுதியைப் பெற்ற குகேஷ், இளம் வயதிலேயே (17) உலகப் பட்டத்தை வெல்லும் வீரராக மாறியுள்ளார்.
அவருக்கு விஸ்வநாதன் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்த்தில், ''இளம் சாம்பியன் குகேஷுக்கு வாழ்த்துக்கள். போட்டியின்போது கடினமான சூழலை நீங்கள் கையாண்ட விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த தருணத்தை கொண்டாடுங்கள்'' என தெரிவித்தார்.
அதேபோல், ஆனந்த் மஹிந்திரா, 'வெப்ப மாநிலத்தில் இருந்து வந்தபோதும், போட்டியின் கடினமான நேரங்களை எளிதாக சமாளிக்கும் திறன் கொண்ட 17 வயது சாம்பியன் குகேஷ்க்கு வாழ்த்துகள். இவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |