காய்கறி வியாபாரியின் பேரன்... 19 வயதில் ரூ 33,000 கோடி சொத்துக்களுக்கு அதிபதி
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் 19 வயதேயான Clemente Del Vecchio.
பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில்
பெரும் வணிக நிறுவனங்களின் தலைவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, தங்களின் ஆஸ்தியை அதிகப்படுத்துவார்கள்.
ஆனால் இன்னும் தொழில்முறையாக எந்த வணிகத்திலும் ஈடுபடட்தொடங்காத இளைஞர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இத்தாலியரன Clemente Del Vecchio-ன் சொத்து மதிப்பு என்பது தற்போது 4 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. இத்தாலிய பெரும் கோடீஸ்வரர் Leonardo Del Vecchio என்பவரின் இளைய மகன் தான் இந்த Clemente.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் Leonardo Del Vecchio மரணமடைந்த நிலையில், அவரது மனைவியும் ஆறு குழந்தைகளும் அவருடைய 25.5 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆகினர்.
அதில் ஒருவர் Clemente Del Vecchio. வரலாற்றில் இளம் பில்லியனர் என்ற அந்தஸ்தை 2022ல் பெற்றார். அப்போது அவருக்கு 18 வயது. குடும்ப சொத்தில் இருந்து சுமார் 12.5 சதவீத ஆஸ்தியை அவர் பெற்றார்.
மிலனில் காய்கறி விற்பனையாளராக
இருப்பினும் கல்வியிலும் தமக்கு பிடித்தமான பொழுதுபோக்கிலும் ஈடுபடவே தாம் தற்போது முடிவு செய்துள்ளதாக Clemente தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படித்து இந்தத் துறைகளில் தொழிலைத் தொடர விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய கண்ணாடி நிறுவனமான EssilorLuxottica-ன் தலைவர் தான் Leonardo Del Vecchio. இத்தாலி முழுவதும் பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறது இவரது நிறுவனம்.
ஆனால் தந்தையின் நிறுவனங்களை முன்னெடுத்து நடத்தும் திட்டம் தற்போது இல்லை என்றே Clemente தெரிவித்துள்ளார்.
Clemente Del Vecchio-ன் தாத்தா மிலனில் ஒரு காய்கறி விற்பனையாளராக இருந்தார் என்பதும், Clemente பிறப்பதற்கு முன்பே அவர் இறந்தார் என்பதும் பலரும் அறிந்திராத தகவல் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |