சிறு நோய்களுக்கு கூட தீர்வு தரும் பாட்டி வைத்தியம்! இதோ சில உங்களுக்காக
இன்றைய காலகட்டத்தில் நவீன மயமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து வந்தாலும் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தேடி செல்வதுண்டு.
மருத்துவமனை இல்லாத அந்த காலத்தில் பலரும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதனை சரி செய்தனர்.
அந்தவகையில் தற்போது உடலில் ஏற்படும் சில நோய்களுக்கு சில பாட்டி வைத்தியமுறைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
- வெந்தய பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உடல் உஷ்ணமும் குறையும்.
- மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
- சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
-
பொடுகை தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
-
வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது நல்லது.
-
தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
-
கடலை மாவு வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் பருக்கள் நீங்கும். முகம் சொரசொரப்பு எரிச்சல் நீங்கும்.
-
பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டுக் காய்ச்சி அடிக்கடி காலையில் குடிக்க தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.
-
இஞ்சியைப் பிழிந்து கொஞ்சம் உப்புப் போட்டுக் குடித்தால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.