திருநங்கை பேத்திக்கு ஆதரவளித்து வளர்த்த 87 வயது பாட்டி - வைரல் வீடியோ!
தன்னுடைய திருநங்கை பேத்திக்கு ஆதரவாக இருந்து சாதிக்க உறுதுணையாக இருந்திருக்கிறார் 87 வயதான பாட்டி.
"எனக்கு வயது 87, எனது பேத்தி காளிக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன்" என்று தலைப்பிட்ட இந்த வீடியோ, Humans Of Bombay இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் என் பேத்தி காளி ஆணாக பிறந்தாள், ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் அவள் தான் பெண்ணாக உணர்வதை என்னிடம் தெரிவித்தார்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த எனக்கு உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது. இந்த சமூகம் அவளை எப்படி நடத்தும், உறவினர்கள் அவளை எப்படி பேசுவார்கள் என்ற கவலை என் மனதை ஆக்கிரமித்தது.
இதனால் நான் வீட்டுக்குளேயே இருந்தேன் அவளுடன். சில நாட்களுக்கு பிறகு காளி மனதாலும், உடளவிலும் சில பிரச்சனைகளை சந்திப்பதை பார்த்து அவளுக்கு ஆதரவாக இருக்க எண்ணினேன்.
அதனால் எனது நகைகளை அவளிடம் கொடுத்து அவளை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதை தெரியப்படுத்தினேன்.
பின்னர் அவள் மகிழ்ச்சியுடன் இருந்தாள். தற்போது எனது பேத்தி காளியை உங்களிடம் அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
இவர் தான் எனது பேத்தி, அவள் எப்போதும் சந்தோசமாக இருக்க நான் விரும்புகிறேன் என்ற வாசகங்களுடன் வீடியோ நிறைவடைகிறது. மேலும் அந்த வீடியோவில், காளி தனது பாட்டியுடன் இருக்கும் புகைப்படங்களும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.