கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பலியான இந்திய தம்பதியின் அடையாளம் தெரிந்தது
கனடாவில் பிரதான சாலை 401ல் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட இந்திய தம்பதிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாகன விபத்தில் சிக்கி பலியானவர்கள்
ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தால் குறித்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இந்திய துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,
Heartfelt condolences on tragic loss of Indian nationals Mr. Manivannan, Mrs. Mahalakshmi & their grandchild in the Highway 401 collision. CG met the bereaved family at the hospital & assured all possible assistance. We are in touch with Canadian authorities @MEAIndia @HCI_Ottawa
— IndiainToronto (@IndiainToronto) May 3, 2024
பிரதான சாலை 401ல் வாகன விபத்தில் சிக்கி பலியானவர்கள் 60 வயது மணிவண்ணன் அவரது மனைவி 55 வயது மகாலட்சுமி மற்றும் அவர்களின் பேரக்குழந்தை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பத்தினரை மருத்துவமனையிலேயே இந்திய துணைத் தூதுவர் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கனேடிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் கருத்துப்பரிமாற்றம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று திங்கட்கிழமை மூன்று மாத குழந்தையும், தாத்தா பாட்டியும் விட்பியில் பிரதான சாலையின் கிழக்குப் பாதையில் நிசான் சென்ட்ரா காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதே வேளை Durham பிராந்திய காவல்துறை அதிகாரிகள், கிழக்கு நோக்கி செல்லும் பாதையில் மேற்கு நோக்கிச் செல்லும் சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர்.
சாரதி சம்பவ இடத்திலேயே மரணம்
இந்த நிலையிலேயே பயங்கர விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தின் போது, சென்ட்ரா காரில் குழந்தையின் பெற்றோரும் இருந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சரக்கு வேனை ஓட்டிச் சென்ற 21 வயதுடைய சாரதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார் என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி, 38 வயதான ஆண் பயணி ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மையில் திருட்டு சம்பவம் தொடர்பிலேயே Durham பிராந்திய காவல்துறை சம்பவயிடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார், இதனையடுத்து அதிகாரிகள் அவரை பல தெருக்கள் வழியாகவும் பிரதான சாலை 401லும் பின்தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தற்போது, தவறான பாதையில் விரைந்து செல்லும் வாகனத்தை ஏன் பொலிஸ் தரப்பு தொடர்ந்துள்ளது என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. இந்த விவகாரமும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |