இலங்கை அணியில் முக்கியமானவருக்கு கொரோனா உறுதி!
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு கொரோனா உறுதியானதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.
பிளவர் லேசாக கொரோனா அறிகுறிகளைக் காட்டியபோது அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பது இருப்பது அடையாளம் காணப்பட்ட உடனேயே, இங்கிலாந்தில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருக்கும் இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து பிளவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
பிளவர் தற்போது மருத்துவ நெமுறைகளுக்கு உட்பட்டுள்ளார்.
மீதமுள்ள இலங்கை அணியினருக்கு புதிய பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டன, அதில் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது என இலங்கை கிரிக்கெட் அறிக்கை வெளியிட்டுள்ளது.