கரும்பு தின்னக்கூலியா? சுவிஸ் மாகாணம் ஒன்று அளிக்கும் நிதி உதவி
சுவிஸ் மாகாணமொன்று, செவிலியராக பயிற்சி பெறுவோருக்கு உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளது.
என்ன காரணம்?
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் செவிலியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.
செவிலியராகப் பயிற்சி பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் இணைவோரில் பலர், தங்கள் படிப்பை முடிப்பதில்லை.
ஆகவே, இந்த பிரச்சினையை முடிக்க சுவிஸ் மாகாணம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.
அதாவது, செவிலியர் பயிற்சியில் இணைவோருக்கு, மாதம் ஒன்றிற்கு 3,000 சுவிஸ் ஃப்ராங்குகள் உதவித்தொகை வழங்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சலுகையைப் பெற விரும்பும் மாணவ மாணவியர், ஒன்றில் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்களாக இருக்கவேண்டும், அல்லது பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்களாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |