சருமத்தின் அழகை மேலும் மெருகேற்ற வேண்டுமா? அப்போ இந்த பழம் ஒன்றே போதுமே!
Beauty Tips
Skin Problem
By Kishanthini
திராட்சையில் வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம். வைட்டமின் சி மட்டுமல்ல, இதில் மற்ற பிற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆஸிடண்ட் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரும் உதவியாக இருக்கின்றது.
சருமத்தில் உள்ள பழ பிரச்சினைகளை தீரக்க கூடியதாக இது இருக்கின்றது. தற்போது திராட்சையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
- திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும்.
- திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.
- திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.
- திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.
- திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.
- கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
- சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US