திராட்சை Vs உலர் திராட்சை! எது ஆரோக்கியமானது?
பொதுவாக எல்லா பழங்களுமே தன்னுள் எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
அதில் திராட்சையும் அடங்குகின்றது. திராட்சை இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருப்பதுடன், அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக திகழ்கின்றது.
அதைப்போல் தான் உலர் திராட்சையும். திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. இது சுவையாக இருப்பதோடு மிகவும் இனிப்பாக இருக்கும். அத்துடன் பிரியாணி போன்ற உணவுகளுக்கு சுவைக்காக சேர்க்கப்படுகிறது.
இருப்பினும் நம்மில் சிலருக்கு திராட்சை மற்றும் உலர் திராட்சையைப் பார்க்கும் போது, நம்மில் பலரது மனதிலும் ஒரு கேள்வி எழுவதுண்டு. அது இவற்றில் உண்மையில் மிகவும் ஆரோக்கியமானது எது?
அந்தவகையில் தற்போது இவற்றில் எது ஆரோக்கியமானது? எதனை அதிகம் எடுத்து கொள்ளலாம் என்ற கேள்விக்கான் பதிலை இங்கு பார்ப்போம்.
திராட்சை
ரெஸ்வெராட்ரோல் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது சிவப்பு திராட்சைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த கலவை இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
திராட்சைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி முழுமையாக நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் சரும செல்களை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, புறஊதாக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
திராட்சை கருமையான திட்டுகள் மற்றும் சரும சுருக்கத்தைக் குறைக்கும் பல்வேறு வீட்டு வைத்தியங்களிலும், ஃபேஸ் பேக்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
உலர் திராட்சை
கோல்டன் உலர் திராட்சை மிகவும் ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதில் மற்றவற்றை விட அதிகளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.
எது சத்துக்கள் அதிகம் கொண்டது?
- திராட்சை பழத்தில் 80% நீர்ச்சத்து உள்ளது. உலர் திராட்சையில் வெறும் 15% தான் நீர்ச்சத்துள்ளது.
- திராட்சையுடன் ஒப்பிடும் போது, உலர் திராட்சையின் 3 மடங்கு அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
- திராட்சையில் வைட்டமின்களானது உலர் திராட்சையை விட அதிகமாக உள்ளது.
- திராட்சையில் உள்ள வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்றவை, உலர் திராட்சையில் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது.
எதில் கலோரிகள் அதிகம்?
- திராட்சையில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இது தான் பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது.
- உலர் திராட்சையில் கலோரிகளானது திராட்சையை விட மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் திராட்சையை உலர்த்தும் செயல்முறையின் போது, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சர்க்கரை, கலோரிகளாக மாறுகின்றன.
- அரை கப் உலர் திராட்சையில் 250 கலோரிகள் உள்ளன. அதே சமயம் அரை கப் திராட்சையில் வெறும் 30 கலோரிகளே உள்ளன.
அதிக ஊட்டச்சத்து எதில் உள்ளது?
- உலர் திராட்சையில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன.
-
உலர் திராட்சையில் டார்டாரிக் அமிலம் என்னும் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. டார்டாரிக் அமிலம் குடல் செயல்பாட்டை மேம்படுத்தவும், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சமநிலையில் பராமரிக்கவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது.

