சொந்த தொழில் தொடங்க சூப்பரான ஐடியா! ரூ.1,000 முதலீடு செய்து தினமும் ரூ.3,000 சம்பாதிக்கலாம்
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெரும் சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சொந்த தொழில் தொடங்க ஐடியா
தற்போதைய சூழலில் ஒரு நிறுவனத்திற்கு சென்று வேலை செய்வதற்கு பதிலாக சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று தான்இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இந்தியர்கள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபியை குடிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி குடித்தால் மட்டுமே அந்த நாளானது நன்றாக தொடங்கும் என்று சிலரது எண்ணமாகவும் இருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் ஒன்றிணைந்து காணப்படுகிறது.
இந்த டீ ஆனது பலருக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியர்களை பொறுத்தவரை, காபியை ஒப்பிட்டால் ஒரு நாளைக்கு ஒரு கப் காபிக்கு 30 கப் டீ குடிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒரு இந்தியர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு டீ குடிக்கின்றனர்.
மேலும், டீ உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் டீயில் 70 சதவீத டீ உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.
தேயிலை தொழில்
சொந்த தொழில் தொடங்குவதற்கு குறைந்த முதலீட்டில் அதிகளவில் வருமானம் கிடைக்க தேயிலை தொழில் நல்லது.
இந்த தொழில் தொடங்குவதற்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை மட்டுமே மூலதனமாக தேவைப்படும். டீயை நாம் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாகவும் விற்கலாம்.
அதுமட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்கள் தங்களுடைய உதிரி டீயை விற்பதற்கு ஃப்ரான்சைஸ் வழங்கும். இதனால் நாம் விற்பனை கமிஷன் மூலம் சிறிய முதலீட்டில் நல்ல ஆதாயம் பெறலாம்.
இந்த தொழிலில் முதல் நாளில் 10 கிலோ டீயை விற்பனை செய்து தினமும் ரூ.600 சம்பாதிக்கலாம். அந்த வகையில் மாதத்திற்கு 15 முதல் 18 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.
அதே நேரத்தில் சில மாதங்கள் பிறகு உங்களது தொழில் வளர்ச்சியடைந்தவுடன் தினமும் ரூ.1,800 முதல் ரூ.3,000 வரை சம்பாதிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |