Great Manchester Run... சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானியர்
பிரித்தானியாவில் நடந்த கிரேட் மான்செஸ்டர் ஓட்டத்தின் போது 40 வயது மதிக்கத்தக்க நபர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணம்
ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட அரை மாரத்தான் போட்டியின் போதே அந்த நபர் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட அரை மாரத்தான் போட்டியில் சுமார் 30,000 பேர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Portland சாலையில் இருந்து தொடங்கி Deansgate முடிவடைந்தது. ஞாயிறன்று மரணமடைந்த அந்த நபர் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அவருக்கு என்ன நேர்ந்தது எனவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அவரது இறப்புக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |