6 மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்துவிட்டு வெளியேறுபவர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி
ஓய்வூதியம் தொடர்பாக ஒரு பெரிய மாற்றத்தை EPFO கொண்டு வந்ததால் ஊழியர்களுக்கு பெரிய நற்செய்தி காத்திருக்கிறது.
பெரிய நற்செய்தி
EPS விதிகளின் கீழ், ஓய்வூதிய நிதி திரட்டும் நிறுவனமானது 6 மாதங்களுக்குள் முடிவடைந்த எந்தவொரு சேவையையும் ஓய்வூதியம் பெறுவதற்கு கருத்தில் கொள்ளாமல் இருந்தது.
ஆனால், தற்போதுள்ள புதிய விதிகளின் கீழ், ஏப்ரல்-மே 2024 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இனிமேல் ஆறு மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்து வேலையை விட்டு வெளியேறுபவர்களுக்கும் EPS பலன் வழங்கப்படும். அவர்களும் இனி தங்கள் ஓய்வூதிய பங்களிப்பை இழக்க வேண்டியதில்லை.
ஒருவர் 1 மாத சேவையை முடித்து EPS திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்தாலும் அந்த ஊழியர்கள் இனி ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆவார்.
மிகக் குறுகிய காலத்திற்கு ஒரு நிறுவனத்தில் சேரும் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
6 மாதங்களுக்குள் ராஜினாமா செய்திருந்து ஓய்வூதியப் பங்கு வழங்கப்படவில்லை என்றால், 2024 ஆம் ஆண்டின் விளக்கத்தைக் குறிப்பிட்டு EPFO-விடம் புகார் செய்யுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |