சச்சினின் காலில் திடீரென விழுந்த ஜாம்பவான் வீரர்!
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் திடீரென சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு சச்சின் டெண்டுல்கர் மெண்டராக உள்ளார்.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் இரண்டு வரிசையாக எதிரெதிரில் வந்து கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது பஞ்சாப் அணி வீரர்களை சச்சின் பாராட்டி வந்தபோது, பஞ்சாப்பின் பீல்டிங் பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரருமான ஜான்டி ரோட்ஸ் திடீரென சச்சினின் காலில் விழுந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத சச்சின், அவரை தடுத்தும் ரோட்ஸ் காலை தொட்டு வணங்கினார்.பின்னர் இருவரும் கட்டியணைத்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.
i missed this last night why is he like this? pic.twitter.com/AnlnoyZgOp
— m. (@idyyllliic) April 14, 2022