531 ஓட்டங்கள் இலக்கு வைத்தும் வெற்றி இல்லை! நியூஸிலாந்திற்கு பயத்தை காட்டிய இருவர்
நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ரச்சின் ரவீந்திரா 176 ஓட்டங்கள்
ஹாக்லே ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. 
முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து 231 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 167 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் 64 ஓட்டங்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
அணித்தலைவர் டாம் லாதம் (Tom Latham) 145 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 176 ஓட்டங்களும் விளாச, நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 466 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் 531 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எட்டமுடியாமல் மேற்கிந்திய தீவுகள் ஆல்அவுட் ஆகிவிடும் என்ற கிரிக்கெட் உலகில் எதிர்பார்க்கப்பட்டது.
வலுவான கூட்டணி
ஆனால் ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரேவ்ஸ் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் நியூஸிலாந்தின் வெற்றிக்கனவை தவிடுபொடியாக்கினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் 140 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 15 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழக்க, கிரேவ்ஸ் மற்றும் ரோச் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்தக் கூட்டணியை பிரிக்க போராடிய நியூஸிலாந்து அணியால் கடைசி நாள் முடியும் வரை வீழ்த்த முடியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 457 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
ஜஸ்டின் கிரேவ்ஸ் 202 ஓட்டங்களும் (388 பந்துகள்), கேமர் ரோச் 58 ஓட்டங்களும் (233 பந்துகள்) எடுத்து களத்தில் நின்றனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |