கிரீன், ஓவன் மாறி மாறி சிக்ஸர்மழை! 190 ரன் இலக்கை செஸ் செய்த அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹோப், சேஸ் அதிரடி அரைசதம்
ஜமைக்காவில் நடந்த டி20 போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.
The underrated power of Shai Hope!💥
— Windies Cricket (@windiescricket) July 21, 2025
MAXIMUM!#WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/YR3JIHHyHr
முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷாய் ஹோப், சேஸ் அதிரடியில் மிரட்டினர்.
ரஸ்டன் சேஸ் (Roston Chase) 32 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
அடுத்து அரைசதம் விளாசிய ஷாய் ஹோப் (Shai Hope), 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஹெட்மையர் விளாசல்
பின்னர் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹெட்மையர் (Hetmyer) 19 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாச, மேற்கிந்திய தீவுகள் 189 ஓட்டங்கள் குவித்து. ட்வர்ஷுய்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Hettie goes over the ropes with a monster maximum!🏏🚀#WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/GtkuTldFF1
— Windies Cricket (@windiescricket) July 21, 2025
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் வாணவேடிக்கை காட்டிய கேமரூன் கிரீன் (Cameron Green) 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்கள் விளாசி தெறிக்கவிட்டார்.
சிக்ஸர்மழை
மேக்ஸ்வெல் 11 ஓட்டங்களில் வெளியேற, மிட்செல் ஓவன் (Mitchell Owen) சிக்ஸர்மழை பொழிந்தார்.
அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் அவுஸ்திரேலியா 18.5 ஓவரில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஓவன் 27 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் மோட்டி, அல்ஸரி ஜோஸப் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
That was some seriously clean striking from Cam Green.
— cricket.com.au (@cricketcomau) July 21, 2025
SCORES: https://t.co/ufzWlsMljU | #WIvAUS pic.twitter.com/ISumCQ9dFW
An incredibly impressive 50 for Mitch Owen in his T20I debut 🔥
— cricket.com.au (@cricketcomau) July 21, 2025
SCORES: https://t.co/ufzWlsMljU | #WIvAUS pic.twitter.com/ZGwZnIvDzM
𝙈𝙞𝙩𝙘𝙝𝙚𝙡𝙡 𝙊𝙬𝙚𝙣’𝙨 𝘿𝙧𝙚𝙖𝙢 𝘿𝙚𝙗𝙪𝙩 💫
— FanCode (@FanCode) July 21, 2025
Thrown into the fire on debut, Mitchell Owen delivered a composed 50 (27) to steer Australia through a tricky chase 🤌#WIvAUS pic.twitter.com/FMwafMx07u
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |