Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நெருங்கி வருவதால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் மூன்று வாரங்களில் குடியுரிமை பெறலாம் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள் (AAPI) Victory Fund தலைவர் சேகர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், தகுதியான கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் குடியுரிமை பெறுவது எளிது என்று அவர் கூறியுள்ளார்.
நவம்பர் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பான்மையான இந்தியர்களின் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது சுமார் 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் வைத்தியர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற திறமையான மக்கள் உள்ளனர்.
கிரீன் கார்டு பெற்று ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் உடனடியாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நரசிம்மன் வலியுறுத்துகிறார்.
ஏனெனில், அவர்களின் வாக்குகள் இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது, இந்திய அமெரிக்கர்கள் மற்றும் ஆசியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US Green Card Holders, US Citizenship, US Presidential Elections 2024, Kamala Harris