குளிர்காலத்தில் சூடான தோசைக்கு காரசாரமான பச்சைமிளகாய் சட்னி: எப்படி செய்வது?
பச்சை மிளகாய் நீரிழிவு நோய் முதல் புற்றுநோய் வரை ஒரு நல்ல அருமருந்தாக செயல்படுகிறது.
பெரும்பாலும் வீடுகளில் காலை, இரவு என அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவகை தான் இட்லி, தோசை.
அந்த இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் பச்சைமிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடுகு- ½ ஸ்பூன்
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- பூண்டு- 10
- புளி- ஒரு எலுமிச்சை அளவு
- பச்சைமிளகாய்- 25
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- சாம்பார் வெங்காயம்- 20
- பெருங்காயம்- ஒரு சிட்டிகை
- வெல்லம்- ஒரு ஸ்பூன்
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து இது நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டி தேவையான அளவு உப்பு, வெல்லம் போட்டு அரைத்து எடுக்கவும்.
பின்னர் மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது, அதில் கடுகு கறிவேப்பிலை பூண்டு பற்கள் போட்டு தாளிக்கவும்.
பின் இதனை அரைத்த சட்னியில் சேர்த்து கிளறினால் அட்டகாசமான சுவையில் காரசாரமான பச்சைமிளகாய் சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |