3 மாதங்கள் வரை பச்சை மிளகாய் அழுகாமல் இருக்கணுமா? இப்படி வைத்தால் போதும்
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பச்சை மிளகாய்க்கு என்றுமே இடமுண்டு.
காரம் என பலர் ஒதுக்கினாலும் பச்சை மிளகாயிலும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
குறிப்பாக வைட்டமின் சி இதில் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து இதயநோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் தலைமுடி செழித்து வளரவும் உதவிபுரிகிறது.
இப்படி பல நன்மைகளை வாரிவழங்கக்கூடிய பச்சை மிளகாய் விரைவில் அழுகிவிடக்கூடியது.
ஆனால் சுமார் மூன்று மாதங்கள் வரை அழுகாமல் பத்திரமாக பாதுகாக்க முடியும்.
டிப்ஸ் 1
பச்சை மிளகாயை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு, டிஷ்யூ பேப்பரால் துடைத்துவிடவும், வெளியில் அல்லது மின்விசிறிக்கு கீழே காயவிட்டு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கலாம். மறக்காமல் இதன் காம்புகளை அகற்றி விடவும்.
டிப்ஸ் 2
பச்சை மிளகாயை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கும் போது அதன் கீழே டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டு மிளகாயை போட்டு வைக்கலாம்.
டிப்ஸ் 3
பச்சை மிளகாயை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்து ஐஸ் ட்ரேயில் போட்டு சேமிக்கலாம், சமைக்கும் போது மிளகாய் பொடிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம், இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.