உடலிற்கு சத்தான பச்சைப்பயிறு சப்பாத்தி.., எப்படி செய்வது?
பச்சைப்பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிற்கு வைட்டமின்கள், நார்ச்சத்துகள் போன்றவை கிடைக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சுவையான பச்சைப்பயிறு சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயறு- 2 கப்
- பச்சைமிளகாய்- 2
- சீரகம்- 2 ஸ்பூன்
- கோதுமை மாவு- 2 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சைப் பயிரை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பச்சைப்பயறு, பச்சைமிளகாய் மற்றும் சீரகம் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பச்சைப் பயறு கலவையை ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
இதற்கடுத்து சிறிய சிறிய உருண்டையாக்கி உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும்.
இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி மாவை சுட்டெடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி ரெடி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |