சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு பயிறு சாப்பிட்டால் போதும்: என்ன தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பச்சை பட்டாணியை அவசியம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எடை குறைக்க உதவுவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டுவது வரை பச்சை பட்டாணியில் பல நன்மைகள் உள்ளது.
உடல் எடையை குறைக்க உதவுவதற்கு ஏன் பச்சை பட்டாணி பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் குறைவான கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளதால் எடையை பரமாரிக்க அல்லது உடல் எடைய குறைக்க விரும்புகிறவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
பச்சைபட்டாணியில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்த புரத்தச்சத்து மிகவும் அவசியம்.
பச்சைபட்டாணியில் உள்ள புரதம் வயிறு நிறைவை தரக்கூடியது. இதனால் கலோரிகள் குறைவாக எடுத்துக்கொள்வதால் உடல் எடையும் குறைகிறது.
பச்சைபட்டாணியில் அதிகளவு புரதமும் நார்ச்சத்தும் உள்ளதால், குறைவாக சாப்பிட்டாலே நம் வயிறு நிரம்பிவிடுகிறது. இதன் காரணமாக எளிதில் பசி எடுக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.
இதில் நார்ச்சத்தும் நிரம்பியுள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து நார்ச்சத்து. இது உங்கள் உடலில் கலோரிகள் அதிகமாவதை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் உள்ள குறைவான க்ளைசைமிக் குறியீடு எளிதில் செரிமானமாகும். மேலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பச்சை பட்டாணியில் அதிகளவு வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளது. மேலும் இரும்புச்சத்து, மாக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்களும் உள்ளது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையம், உடல் எடையும் குறைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |